ஜோ பைடனை கொல்ல கடவுள் அனுப்பிய நபர்! வெளியான தகவல்
அமெரிக்காவில் கடவுள் அனுப்பியதாக கூறி, ஜனாதிபதி ஜோ பைடனை கொல்ல புறப்பட்டு சென்ற நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபரே ஜனாதிபதி ஜோ பைடனை கொல்ல தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளார்.
கட்டுமான ஒப்பந்ததாரரன Scott Merryman கடவுள் தம்மை அனுப்பியதாகவே விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
சர்ப்பத்தின் தலையை வெட்டினால் நாடு காப்பாற்றப்படும் என்றும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பிளவுப்படுத்தும் கொள்கையினால் அமெரிக்க மக்கள் மிகவும் வெறுத்துப்போயுள்ளனர் என்றும், இதன் காரணமாக அவர் நரகத்திற்கு தான் செல்வார் என்றும் அதிகாரிகளிடம் Scott Merryman கூறியுள்ளார்.
குறித்த நபர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவர் தனது சமூக ஊடக பக்கங்களிலும் அச்சுறுத்தும் விதமாக செய்திகளை பதிவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
