மின்சாரசபை பொதுமக்களிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் வழங்கப்படும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் இலங்கை மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுகிறது. அத்துடன் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் டீசலின் கையிருப்பு குறைவடைந்து வருகிறது.
குறித்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக 149 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகிறது.
ஆகையினால் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம்'' என்றார்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
