கடலில் நீராட சென்ற இரு பாடசாலை மாணவர்கள் மாயம்: ஒருவர் மீட்பு (Photos)
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன், அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், அதனையும் பொருட்படுத்தாது நீச்சலில் ஈடுபட்டுள்ளனர்.
வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில், இவ்வாறு கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், ஏனைய இருவரை தேடும் பணியில் கடற்படையினர், கடற்தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் மூவரில் ஒருவரை அலை இழுத்து சென்ற நிலையில், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு நண்பர்களும் ஈடுபட்டபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு, தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 12 மணி நேரம் முன்

ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டதால் பல மில்லியன் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஜேர்மன் மாகாணம் ஒன்றிலிருந்து ஒலிக்கும் குரல் News Lankasri

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

வெளிநாடு ஒன்றில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை! ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக தகவல் News Lankasri

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
