அரசாங்கத்தினால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படலாம்: சஜித் - செய்திகளின் தொகுப்பு
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனவே மக்கள் மிகுந்த குழப்ப நிலைக்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேன்றைய தினம் (28.06.2023) பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடன் மறுசீரமைப்பு மூலம் என்ன நடக்கும் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது ஜனாதிபதியின் கடமை எனவும், மக்களுக்குத் தகவல்களை மறைப்பதன் மூலம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படலாம்.
அரசாங்கம் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
ஆனாலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு முறையான விளக்கமளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri