எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவல் இலங்கைக்கு கற்றுத்தந்த பாடம்!
இலங்கைக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பெருந்தொகையிலான நட்டஈடு கோரப்படும்.பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது இலங்கைக்கு அவசியமானதாகும்.
இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஏற்படுத்திய மாசு பற்றிய அரசியல் புலணுணர்வே இது. அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பெரும்பான்மையான மக்களுக்கும் அழிவேற்படுத்திய மாசாக்கத்திற்கான நட்டஈடு எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது பற்றித் தெரியாது.
சமுத்திரங்களில் பொலித்தீனையும் பிளாஸ்டிக்கினையும் கொட்டுவதற்கென அடையாளம் காணப்பட்ட 20 நாடுகளுக்கான உலகளாவிய சுட்டியில் ஐந்தாவது நாடாக இருக்கும் இலங்கை, கடல்சார் சூழலின் நீடுறுதியான முகாமைத்துவத்திற்காக நட்டஈட்டினைக் கோரி அதனைப் பயன்படுத்த வேண்டும்.
நைத்திரிக் அமிலக் கசிவால் கொழும்புக்கு அருகில் உள்ள கடலில் தீப்பற்றிய சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு என்ன நடந்தது? தீயைக் கட்டுப்படுத்த இலங்கையும் இந்தியாவும் எடுத்த முயற்சிகளைத் தாண்டி பல கொள்கலன்கள் கடலினுள் சரிந்து வீழ்ந்துவிட்டன.
எரிந்த கொள்கலன்களின் எச்சங்களும் பிளாஸ்திக் மூலப்பொருட்களும் நீர்கொழும்பில் கரையொதுங்கிய அதேவேளை உருவில் மிகச் சிறியதும் தீங்குமிக்கதும் குறைந்த அடர்த்தி கொண்டதுமான பிளாஸ்திக் உருளைகள் இறந்த மீன்களின் உடலில் காணப்பட்டன. இதுவரை எண்ணெய்க் கசிவு ஏற்படவில்லை என்ற போதிலும் எரிந்த பிளாஸ்திக்கினால் கப்பலைச் சுற்றி எண்ணெய்ப் பிசுக் கறை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலும் பல விரிவான தகவல்களுடன் வருகிறது The Report விசேட தொகுப்பு,

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
