முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி வாய்ப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கான விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனுமதியின்றி உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருந்தமைக்காக செலுத்தவேண்டிய உரிய அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு குறித்த எட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின் தமது உத்தியோகபூர்வ இல்லங்களைவிட்டு வெளியேறாது, இதுவரையில் அபராதத்தையும் செலுத்தாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களையும் உடனடியாக செலுத்துமாறு இரண்டாவது தடவையாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் , இவ்வறிப்புக்களை அவர்கள் புறக்கணித்தால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படுமென நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
அனுமதியின்றி உத்தியோர்கபூர்வ இல்லத்தில் ஒருநாள் தங்குவதற்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri