பிள்ளையானுக்கு உதவிய சிறைக்காவலனின் புகைப்படம் தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை (Video)
பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் உதவியதாக கூறப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பபட்டு வருகின்றது.
அண்மையில் வெளிவந்த அசாத் மெளலானாவின் காணொளி ஒன்றில் பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் சில உத்தியோகத்தர்கள் உதவி செய்ததாக குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலையில் தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஊழியராக கடமை புரியும் நவநீதன் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சிறைச்சாலைக்குள் எடுத்த புகைப்படங்கள்
தன்னுடைய தலைவரின் விசுவாசத்திற்காக பல உதவிகள் செய்ததுடன் சிறைச்சாலை சட்ட திட்டங்களை மீறி சிறைச்சாலைக்குள் எடுத்த புகைப்படங்களும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சிறைச்சாலைகளின் விதிகளின் பிரகாரம், சிறைக்காவலர்கள் கடமையின் போது எந்தவொரு கட்டத்திலும் கைத் தொலைபேசிகளை பயன்படுத்த முடியாது.

ஆனால் பிள்ளையான் ஆதரவாளர்களான நவனீதன் உள்ளிட்ட இருவரும், நவீன ரக ஆயுதம் சகிதம் தன் கடமை நேரத்தின் போது செல்பி எடுத்து, அதை தன் நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆகவே சிறைச்சாலை விதிகளை மீறி கடமை நேரத்தின் போது கைத் தொலைபேசி பயன்படுத்திய நவனீதன் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதற்கு முன்னதாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
அசாத் மெளலான வெளியிட்ட காணொளியின் பிரகாரம் பிள்ளையானுக்கு சிறையில் உதவி செய்த சகா தொடர்பில், கேள்விகள் தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
  
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        