பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : திரும்பப்பெறப்பட்டது வழக்கு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப்;பெறப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை இன்றுடன் நிறைவு செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது ஆக்கரப்பத்தன பிளான்டேஸன்ஸ் லிமிடெட் உள்ளிட்ட 21 தோட்ட நிறுவனங்களால், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து அண்மையில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியாகாத இடைக்கால ஆணையை கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக தங்களுடன் கலந்தாலோசிக்காமல் தொழிலாளர் துறை அமைச்சர் எடுத்த முடிவு இயற்கை நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறியிருந்தனர்.

எனவே, இந்த முடிவை அரசு தன்னிச்சையாக எடுத்ததாக கூறி, அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாயாக உயர்த்தி வெளியிடப்பட்ட முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து தொழில் அமைச்சு புதிய வர்த்தமானியை 2024 ஜூலை 24 அன்று வெளியிட்டது.
சம்பளச் சபையின் ஊடாக கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் இந்த புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri