இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து ஈரானிய கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கை
இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து, ஈரானின் (Iran) கடற்படை, ஈரானிய வணிகக் கப்பல்களை செங்கடலுக்கு (Red Sea) அழைத்துச் செல்வதாக அந்நாட்டின் கடற்படை தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜமரான் போர்க்கப்பல் ஏடன் வளைகுடாவில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மற்ற நாடுகளின் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல ஈரான் தயாராக இருப்பதாகவும் ஷஹ்ராம் இரானி கூறியுள்ளார்.
செங்கடல் விவகாரம்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவது குறித்து இன்று (17.04.2024) மீண்டும் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஈரானிய படையினருடன் ஹவுதிப் படையினர் இணைந்து, இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால், உலக வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
