ரணிலின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் 08ம் திகதி சமர்ப்பிக்கப்படும்
பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால வரவு-செலவுத்திட்ட அறிக்கை எதிர்வரும் 08ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்குப் பதிலாக புதிய இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை
குறித்த இடைக்கால வரவு செலவுத்திட்ட அறிக்கையில் அபிவிருத்தித் திட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றுக்கு மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
அத்துடன் பொதுமக்களின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் நிவாரணத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அன்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, எட்டாம் திகதி மாலை வரை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
695 பில்லியன் ரூபாவுக்கான உத்தேச இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளை தடையின்றி முன்கொண்டு செல்ல வழியேற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.