கோவிட் காரணமாக இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு வழங்கும் யோசனை
கோவிட் காரணமாக ஜனாதிபதிக்கு இல்லாமல் போன இரண்டாண்டு காலத்தை நாடாளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் யோசனையை கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே(Diana Gamage) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கும் யோசனையும் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே டயனா கமகே இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் காரணமாக இல்லாமல் போன காலம் எஞ்சியிருக்குமாயின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளையும் நிர்மாணித்து முடித்திருக்கலாம்.
நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தவர்கள் ராஜபக்சவினர். நாங்கள் இருக்கும் வரை ஜனாதிபதியை தோல்வியடைய விட மாட்டோம்.
கோவிட் காரணமாக முழு உலகமும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. இங்கிலாந்திலும் தற்போது வரிசையில் மக்கள் நிற்கின்றனர். அந்த நாடுகளில் தற்போது உணவு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam