மனைவியைக் கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது
முல்லேரியா பகுதியில் கணவரொருவர் அவரது மனைவியை பொல்லால் தாக்கி கொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட பகுதியில் நேற்று கணவரொருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அங்கொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற குடும்ப பிரச்சினையின் காரணமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவன் அவரது மனைவியை பொல்லால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தின் போது படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ள முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam