சங்கரத்தையில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று (2021.06.04) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் முதியவர் ஒருவர் மட்டுமே வசித்து வருகின்றார். இந்த நிலையில் இன்று காலை அந்த வீடு திடீரெனத் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இதனை அவதானித்த அயலில் உள்ளவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் வீடும் மோட்டார் சைக்கிளும் தீயில் அகப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
எனினும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இத் தீ விபத்திற்கான காரணம் மின்சார ஒழுக்கா அல்லது வேறு காரணங்களா என இதுவரை
கண்டறியப்படவில்லை.


அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri