யாழில் தீயில் கருகி முற்றாக சேதமடைந்த வீடு (Photos)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (21.08.2023) பதிவாகியுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த அலுமாரிகள், கதிரைகள், தொலைக்காட்சி பெட்டி, துவிச்சக்கர வண்டி, மேசை, உடைகள், ஒலிபெருக்கி சாதனங்கள், ஒன்றரை பவுண் தங்க ஆபரணங்கள், ஒரு தொகை பணம் உள்ளிட்ட வீட்டு தளபாடங்கள் என்பன இதன்போது தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
காரணம் அறியப்படவில்லை
வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி அருகில் உள்ள கணவனின் தாயார் வீட்டுக்கு சென்ற போதே இந்த சம்பவம் நிகழந்துள்ளது.
இந்த தீப்பரவலுக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












