பிள்ளையான் மட்டுமா கடத்தல் கொலைகளை செய்தவர்! திரைமறைவு அரசியலில் வலுக்கும் குற்றச்சாட்டு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள், ஆதரவு அளித்திருக்கலாம் என சில அரசியல் தரப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்புடையவர்கள், பிள்ளையான் குழுவுக்கு ஆதரவு அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மகிந்தவின் ஆட்சியில் (2005-2015) பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, இத்தகைய அரசியல்-ஆயுதக் கூட்டணிகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக அண்மைய அரசியல் வாதங்களில் வெளிவந்திருந்தன.
எனினும், இதற்கு நேரடி ஆதாரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான பின்னணியில் பிள்ளையான் குழுவின் செயல்பாடுகள் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் முழுமையாக இயங்கியிருக்க வாய்ப்பில்லை என பரவலான குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வரும் பின்னணியில் அது யாரால் இயக்கப்பட்டது, அதன் திரைமறைவு எதன் அடிப்படையிலானது என்பதை விளக்குகிறது தொடரும் காணொளி...



