கம்பளையில் கடத்தப்பட்ட சாரதி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்
கம்பளையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போவில் கடமையாற்றும் பேருந்து சாரதி, நேற்று காலை சிலரால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டார்.
இந்நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து குறித்த சாரதி தப்பித்து கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு நேற்று(24.09.2023) இரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்மை வானில் ஏற்றி கொழும்பு, ஊர்கொடவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன்போது அடையாயந்தெரியாத நபர்கள் தன்னிடம் வாள் ஒன்று தொடர்பாக பலமுறை கேட்டதாகவும் குறித்த சாரதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
இதன் பின்னர் சாரதி, பொலிஸாரால் கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வானில் கடத்திச் சென்ற குழுவில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை மாவெலயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வான் ஒன்றில் வந்த சிலர் வழிமறித்து அதன் சாரதியை கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.



