கனடாவிலும் - இலங்கையிலும் இந்திய உளவு அமைப்பு றோவின் சதி! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள் (Video)
இந்திய உளவு அமைப்பான றோ தொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக சர்வதேச மட்டத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கனடா நாட்டின் பிரஜையான சீக்கியத் தலைவர் ஒருவரை கனடா மண்ணில் வைத்து படுகொலைசெய்தார்கள் என்ற குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மீது சுமத்தப்பட்டு, மிகப் பெரிய இராஜதந்திரப் போர் ஒன்று மேற்குலகிற்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாகியுள்ளது.
மறுபக்கம் இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான படுகொலைகள் விடயத்திலும், இந்திய உளவு அமைப்பான றோவை தொடர்புபடுத்திச் செய்திகள் ஆங்காங்கு வெளியாக ஆரம்பித்துள்ளன.
இந்த இரண்டு சம்பவங்களும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும், அவர்கள் எடுத்துவைக்கின்ற அரசியல் நகர்வுகளுக்கும் ஏதோ ஒரு வகையில் மறைமுகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை என்கின்ற அடிப்படையில், இந்த இரண்டு சம்பவங்கள் பற்றியும் ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி,

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
