பேருந்தில் பயணித்த நபரை கடத்திய குழு: பொலிஸ் விசாரணை தீவிரம்
கம்பளை - ஜயமாலபுர பகுதியில் பேருந்தில் பயணித்த நபரொருவர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வான் ஒன்றில் பிரவேசித்த குழுவொன்று, இன்று காலை 6 மணியளவில் கம்பளையிலிருந்து மாவெல பகுதியை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றை வழிமறித்து, அதில் பயணித்த பயணி ஒருவர் மீது ஆயுதமொன்றினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன்பின்னர், வானில் வந்த குழுவினர் குறித்த நபரை, கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் சாரதியாக பணியாற்றிவருபவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam