பேராதனை பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு
பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய திவின் சாஹித்யா என்ற பல்கலைக்கழக மாணவரே கடந்த 22 ஆம் திகதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்திருந்தார்.
சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர், பேராதனை வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் பிரபாத் சேனசிங்க தலைமையில் உரிய திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! குடியரசு கட்சியின் வேட்பாளர் கருத்து கணிப்பு வெளியானது
பேராதனை பொலிஸார் விசாரணை
இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புகளை பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்திய பீடத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் - முருக்கன் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் பேராதனை பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மேலும் இரு மாணவர்களுடன் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது கடந்த 22 ஆம் திகதி அதிகாலை 2:00 மணியளவில் விடுதியில் இருந்த போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
