யாழில் படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு (Photos)
வேலை வாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொடுக்க சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
யாழ். மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று(6) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
2009 இற்கு பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்திகளை உருவாக்கி, அழிந்த வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என்ற வேலைத் திட்டத்தின் வெளிப்பாடாக இவ்வாறான தொழிற்பேட்டைகள் எமது பிரதேசங்களில் தற்போது உருவாகி வருகின்றது.
தீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர்,யுவதிகளுக்களின் தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுக்கொடுக்க சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டு வருகின்றது.
கடற்பரப்பிலான துரித அபிவிருத்தி சேவையிலான பங்களிப்பினை வழங்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்த நிலையில் இதற்கான நடவடிக்கை அரசாங்கத்தினால் முன்னேடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோருக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துகொள்ளுகின்றேன்.
இதனிடையே படகு கட்டும் தொழிற்சாலை பணிகளுக்கான ஒரு வருடப் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
மண்கும்பானில் வெளிநாட்டு - உள்ளூர் தனியார் முதலீட்டாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலைக்கான பணியாளர்களாக பிரதேச இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு
பயிற்சியளிப்பதற்கு முதலீட்டாளர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.



நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
