திருமணத்திற்கு தயாரான மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகன்
பொலநறுவையில் பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரரை, பொலிஸ் அதிகாரி போன்று நடித்து திருமணம் செய்ய முயற்சித்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலநறுவை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால், சீப்புக்குளம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் பிரதான பொலிஸ் பரிசோதகரின் உத்தியோகபூர்வ சின்னம், சீருடையில் பெற்றுக் கொள்ளப்பட்ட புடைகப்படம் மற்றும் போலியான ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் இன்று பொலநறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் திருமணத்திற்கு தயாராக இருந்த மணப்பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலநறுவை குற்ற விசாரணை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
