நான்கு நாட்கள் நாட்டை முடக்கியதால் ஏற்பட்ட பெரும் இழப்பு
நாடு முழுவதும் நான்கு நாட்கள் பயண தடைகள் விதிக்கப்பட்டதன் காரணமாக நாட்டிற்கு 6 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேலான பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த பயண தடை காரணமாக நாட்டின் தேசிய உற்பத்தியில் தினமும் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது.
இதனடிப்படையில் 10 நாட்களுக்கு நாட்டை முடக்கினால், 150 பில்லியன் ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கை சிறிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடு. இதனால், நாட்டை முடக்காது கோவிட் பரவலை முகாமைத்துவம் செய்யும் வேலைத்திட்டத்தை நோக்கி செல்வது மிகவும் முக்கியமானது.
தற்போது மூட வேண்டியது நாட்டை அல்ல நாட்டு மக்களின் வாய்களையே மூட வேண்டும் எனவும் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
