றீ(ச்)ஷா - மாபெரும் உணவுத் திருவிழாவில் பெருந்திரளான மக்கள்
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
இந்நிலையில் றீ(ச்)ஷாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் உணவுத் திருவிழா நிகழ்வானது இந்த மாதம் 7,8,ஆகிய திகதிகளிலும், இறுதி நாளான இன்றும்(14.09.2024) வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
''அக்சய பாத்திரம்'' 2024 எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வு இன்றைய தினம் இரவு 10 மணியுடன் நிறைவு பெறுகிறது.
அக்சய பாத்திரம்
பாரம்பரிய கலை கலாசாரத்துடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மக்கள் அலைகடலென திரண்டு உணவு உண்டு மகிழ்ந்துள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வில் உணவுகளில் பாரம்பரிய அடையாளத்திற்கு அப்பாற்பட்டு, பாரம்பரிய தமிழ் கலாச்சார நடனங்களான மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.