அரசாங்கம் விரைவில் பாரதூரமான அனர்தத்தை எதிர்நோக்கும்:ஜனாதிபதியை எச்சரிக்கும் ஓமல்பே சோபித தேரர்
போராட்டத்தின் மூலம் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கையான எதிர்வுகூறல் ஒன்றை விடுப்பதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி உட்பட ஆட்சியாளர்கள் கண்ணீர் சிந்தும் கண்களுடன் அனர்தத்தை சந்திக்க நேரிடும்

மாநாயக்க தேரர்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆலோசனைகளுக்கு செவிக்கொடுக்காது தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டமானது விரைவில் பாரதூரமான அனர்தத்தை எதிர்நோக்கும்.
கண்ணீர் சிந்தும் கண்களுடன் ஜனாதிபதி உட்பட ஆட்சியாளர்கள் அதனை எதிர்நோக்க நேரிடும். 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதற்கு முன்னர் மக்கள் போராட்டத்திற்காக வீதிக்கு வந்தனர். அடுத்த போராட்டத்தில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இணைந்துக்கொள்வார்கள்.
சுதந்திரமாக செயற்பட எவராவது இடமளிக்கவில்லை என்றால் அதனை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்ல எவராவது இடமளிக்கவில்லை என்றால், அது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam