குறுகிய காலத்தில் 18 ஆயிரம் கிலோ தங்கத்தை விற்ற அரசாங்கம்
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த 19 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் தற்போது ஆயிரம் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் 18 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவிக்கு வந்து குறுகிய காலத்தில் 5 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தங்கத்தை விற்பனை செய்த போது ஒரு அவுன்ஸ் தங்கத்தை ஆயிரத்து 600 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தினத்திற்கு அண்மை தினத்தில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 700 டொலர் என்ற வீதத்தில் அதிகரித்து காணப்பட்டது எனவும் விஜேவர்தன கூறியுள்ளார்.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri