கிராமங்களின் அபிவிருத்தியே அரசாங்கத்தின் இலக்கு: ஆளுநர் புகழாரம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கிராமங்களை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மன்னார் இரணை இலுப்பைக்குளம் ஆண்கள் தமிழ் கலவன் பாடசாலையை 'தரம் 1 சி' ஆக தரம் உயர்த்தும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மன்னார் மாவட்டச் செயலராக கடமையாற்றியதை நினைவுகூர்ந்ததோடு அதிபரின் தூர நோக்கான சிந்தனையைப் பாராட்டியுள்ளார்.
அதிபரை பாராட்டிய ஆளுநர்
உயர்தர வகுப்பை ஆரம்பிப்பதுடன் நின்றுவிடாது அந்த மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவோம் என்ற அவரது இலக்கு வெற்றியடைய வேண்டும் என வாழ்த்திய ஆளுநர், இவ்வாறு நேரிய சிந்தனையுடன் செயற்படும் அதிபர்கள், அதிகாரிகள் வடக்கில் மிகக் குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் எதிர்மறையான சிந்தனையும் எமது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையாமல் இருப்பதற்குக் காரணம் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சஞ்சீவவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத பாதுகாப்பு தரப்பினர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




