டட்லியை மண்டியிட வைக்கும் விதத்தை அரசாங்கம் அறியும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
டட்லி சிறிசேன, செய்தியாளர் சந்திப்பை நடத்தியதன் மூலம் மாத்திரம் அமைச்சர்களை மண்டியிட வைக்க முடியாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மாஃபியாக்களை மண்டியிட வைக்கும் விதத்தை அரசாங்கம் அறியும். எதிர்காலத்தில் அரிசி மாஃபியாக்களை மண்டியிட வைக்கும் விதத்தை முழு நாடும் அறிய முடியும்.
அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடக சந்திப்பை நடத்தி, அரிசி விலை குறித்து அறிவித்தமை மிகவும் நல்லது. அரிசி மாஃபியாக்கள் யார் என்பதை தற்போது முழு நாடும் அறியும்.
அரசாங்கம் கடந்த காலத்தில் அரிசி மாஃபியாக்கள் பற்றி பேசினாலும் அவர்களே ஊடகங்களுக்கு முன்னால் வந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.