அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை அடக்க முயற்சித்து வருகிறது - ஐ.தே.கட்சி
நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம் கல்வி, சுற்றாடல் மட்டுமல்லாது கமத் தொழிலையும் அழித்துள்ள அரசாங்கம், தற்போது மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அழிக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தின் அடக்குதுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் என்பதுடன் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளுக்கு அரசாங்கத்தின் இந்த அடக்கு முறைக்கு எதிராக திரள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வீடியோ தொழிநுட்பம் ஊடாக விசேட உரையொன்றை ஆற்றிய ருவான், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்து, மக்களுக்கு அதற்கான உரிமையை பெற்றுக்கொடுத்தோம்.
எனினும் தற்போதைய அரசாங்கம் எதிரான கருத்துக்களை வெளியிடுவோரை தேவையற்ற வகையில் கைது செய்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri