அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும்! தமிழ் எம்.பி வெளியிட்டுள்ள ஆரூடம்

corona virus mannar covid 19 corona vaccine selvam adaikkalanadhan
By Ashik Jun 13, 2021 12:20 PM GMT
Report

 தமிழ்த் தேசியக் கூட்டமையில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து கொண்டு கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு செயல் படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழ்நிலையில் காணப்படுகின்றது.

அதற்கான முதல் படி எரி பொருட்களின் விலையேற்றம்.மிகவும் மோசமான ஒரு சூழல் இந்த நாட்டில் இருக்கின்ற நிலையில் எரிபொருளை வறிய மக்கள் பயன்படுத்துகின்ற மண்னெண்னை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்கள் கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் தன்னை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களும் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறான ஒரு அபாயச் செய்தியான எரிபொருட்களின் விலையேற்றம் செய்யப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றோம். எரி பொருட்கள் மட்டும் இல்லை.ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரிப்புச் செய்யப்படுவதற்கான காரணமாகவும் உள்ளது.

பாண் உற்பட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். எனவே இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்கின்ற அரசாங்கமாக செயல் படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அந்த வகையில் இலங்கை அரசாங்கம் உடனடியாக விலையேற்றங்களை குறைக்க வேண்டும். நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு நல்ல செய்தியை விலை குறைப்பின் ஊடாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் நான் கூறியது போல் இவ் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும்.

மேலும் சனிக்கிழமை (12) பிரதமர் தலைமையில் கப்பல் தொடர்பாக ஒரு அவசர கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலை பார்க்கின்ற போது குறித்த கப்பலை நாட்டிற்குள் எடுத்ததிற்கான நியாயப்பாட்டினை தெரிவிக்கின்ற வகையிலே குறித்த கூட்டம் அமைந்துள்ளது.

ஆனால் கப்பல் உள்ளே எடுக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் மற்றும் மீனவ சமூகம். மீனவ சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப் போகின்றார்கள் என்பது உண்மை.

மன்னார் வலை குடாவில் கூட கப்பலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதன் ஊடாக பாரிய பிரச்சினையை நிவர்த்தி செய்ய முடியாது. எங்களுடைய மீனவ சமூகம் தங்களிடம் பிடிபடுகின்ற மீனை சர்வதேச ரீதியாக அனுப்பப்படுகின்ற போது சர்வதேசம் எமது மீனவர்களின் மீன்களை கொள்வனவு செய்வார்களா? என்கின்ற அச்சத்தோடு, இருக்கின்றார்கள்.

ஆகவே இலங்கையில் பிடிக்கப்படுகின்ற மீன் வகைகள் சர்வதேச ரீதியாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற போது அவை திருப்பி அனுப்பப்படுகின்ற நிலை ஏற்படுமா? ஏன்ற நிலையில் எமது மீனவ சமூகம் ஒரு அச்சத்துடன் இருக்கின்றது.

விலை உயர்ந்த மீன் வகைகளை அவர்கள் நல்ல விலைக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்வடைகின்ற நிலையினை அவர்கள் எதிர் பார்த்துள்ளனர். யார் எதனை கூறினாலும் பாதீக்கப்படுவது எமது மீனவ சமூகம்.

அவர்களுடைய அன்றாட பிரச்சினை மிக மோசமான ஒரு சூழலை ஏற்படுத்தும். கப்பல் தொடர்பில் நியாயப்படுத்துகின்ற விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உள்ளதைச் சொல்லுங்கள். எங்களுடைய மக்களையும், மீனவச் சமூகத்தையும் காப்பாற்றுகின்ற அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

நிதியை பெற்றுக் கொள்ளவே கப்பலை உள்ளே எடுத்ததாக வாசுதேவ நாணயக்கர தெரிவித்துள்ளார். அரசாங்கம் பல தடவைகள் பணம் சம்பாதிக்கின்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் எமது மக்களை பலிக்காடாக்குகின்ற நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது நாட்டில் இருந்து கோவிட்  தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நாடு முழுமையாக முடக்கப்பட்டது. -ஆனால் நாடு முடக்கப்பட்டமைக்கான நோக்கம் வெற்றி பெற்றதாக இல்லை.

காரணம் தொற்றாளர்களினதும், மரணிப்பவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே இந்த நாட்டை முடக்குகின்ற நிலமை தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள்.

வைரஸின் தாக்கம் கூடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு முதல் காரணம் என்ன என்றால் அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என்றால் முதலில் மக்களுக்கு   தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.

உலக நாடுகளும் அதனையே செய்கின்றது. ஆனால் நாட்டை முடக்கி விட்டு தடுப்பூசி வழங்கவில்லை என்றால் இறப்பு அதிகரிக்கும், தொற்றும் அதிகரிக்கும். எனவே இவற்றை தடுக்க வேண்டும் என்றால்   தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் தொற்றாளர்கள் உள்ளனர். அங்கே தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். வன்னி மாவட்டம் குறிப்பாக முல்லைத்தீவிலும் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடைத் தொழிற்சாலையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆடைத் தொழிற் சாலையினாலேயே   தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது. மேலும் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை அரச செலவில் மேற்கொள்ளப்படுவதாக அறிகின்றோம்.

அவ்வாறு செய்யாமல் அரசினால் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர்.பரிசோதனை சமூகத்திலும், மக்கள் மத்தியிலும் முழுமையாக சென்றடைய வேண்டும். ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுவாக்கம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

கூட்டமைப்பிற்குள் சில பிரச்சினைகள் உள்ளது அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.  தமிழ்த் தேசியக் கூட்டமையில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான எண்ணம் தற்போது வரை இல்லை.

சில பிரச்சினைகள் உள்ளது. அதனை தெரியப்படுத்தி உள்ளோம். உள்ளே இருந்து கொண்டு செயல் படுவோம். ஆனால் தற்போதைய கால சூழ்நிலையில் வெளியில் வந்து செயற்படும் நிலை ஏற்படாது. மக்களை நேசிக்கின்ற கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். கட்சிகளை ஒன்றிணைத்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.  


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US