கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் வெற்றி அடைந்துள்ளது! - அமைச்சர் விமல்
கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் வெற்றி அடைந்துள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க கிட்டியமை அரசாங்கம் அடைந்த வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இறுதியில் எமது அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுத்தது. அவ்வாறான தீர்மானம் எடுப்பது சுலபமானதல்ல.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த தீர்மானம் தொடர்பில் துலங்கிய விதத்தை கவனத்திற் கொண்டால் இந்த நிலைமை குறித்து திருப்தி அடையவில்லை என்பது புலனாகின்றது.” என விமல் வீரவன்ச கூறியுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
