சுதந்திரக் கட்சியினர் பண்டாரநாயக்கவின் பெயரை விற்று பிழைப்பு நடத்தினர் - சந்திரிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் பெயரை விற்று பிழைப்பு நடத்தியதை மாத்திரமே செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Bandaranaikke Kumaratunga) தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha), ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஒரு முறை கூட பண்டாரநாயக்கவின் நினைவு தினத்திற்கு இந்த இடத்திற்கு வந்ததில்லை.
எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் நினைவு தினத்தை நடத்தியதில்லை. தற்போது குடும்பத்தினரே அதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி தற்போது இங்கு வர வாய்ப்புள்ளது. அனைத்து இடங்களில் இருந்தும் விரட்டப்பட்டுள்ளார். இதனால், இன்று இங்கு வர வாய்ப்புள்ளது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri