ஆளும் கட்சியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத சுதந்திரக் கட்சி
ஆளும் கட்சியின் தலைவர்களின் கூட்டம் இந்த வாரம் நடைபெறவிருந்ததுடன் அதில் தமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் கலந்துக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்ததை அடுத்து, கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அனுராதபுரத்தில் நடைபெறும் விசேட சமய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளதால், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாது ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது அரசாங்கம் தொடர்பாக முன்வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக கலந்துரையாடப்பட இருந்ததாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam