நீதிமன்ற தடையுத்தரவை வழங்கிய பொலிஸாரிடமே தடையுத்தரவை மீள வழங்கிய முன்னாள் அரசியல் கைதி
நீதிமன்ற தடையுத்தரவை, வழங்கிய பொலிஸாரிடமே தடையுத்தரவை மீள வழங்கிய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அரசியல் கைதி அ.அரவிந்தனுக்கு நேற்றையதினம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பதற்கு நீதிமன்ற தடையுத்தரவினை வழங்கியிருந்தார்கள்.
நேற்றையதினம் குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற வவுனியா மாவட்ட பொலிஸார் மே 18 தொடர்பான தடை உத்தரவு நீதிமன்ற கட்டளையை வழங்கியிருந்தார்கள்.
அந்த கட்டளையிலே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களினுடைய இறப்பை நாங்கள் நினைவு கூர்வதாகவும் அந்த தினத்திலே, எந்த விதமான விழாக்களையும் நாங்கள் நினைவுகூர முடியாது எனவும் வவுனியா குளம், வவுனியா மாவட்ட பொங்குதமிழ் தூவி கலாச்சார மண்டபம் போன்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு நிகழ்வுகளை நடத்தக்கூடாது எனத் தடை உத்தரவை வழங்கியிருந்தார்கள்.
குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு மாலை 4.30 மணிக்குப் பின்னர் வழங்கப்பட்டதனால் தடையுத்தரவு வழங்கிய பொலிஸாருக்கு குறித்த நபர் தெரிவிக்கையில்,
எங்களுக்குச் சட்ட உதவியை நாடக்கூடிய கால அவகாசத்தை நீங்கள் வழங்கவில்லை. எனவே இது எங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்றும், இன்றையதினம் மே 18 அனுஷ்டிக்கப்படுவதால் இது ஏற்புடையதாக இருக்காதென்றும், இதிலே குறிப்பிடப்பட்டிருப்பது போல நான் பிரபாகரனை நினைவு கூர்வதற்கு தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் நான் பிரபாகரனை நினைவு கூரவில்லை. நாம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தினுடைய படுகொலையாக முள்ளிவாய்கால் நாளையே மே 18 அடையாளப்படுத்துகின்றோம்.
அன்று கொத்து கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட, இந்த இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருகின்ற, ஒரு அடையாளமாகவே மே 18 னை நாங்கள் நினைவு கூருகின்றோம்.
இதனை விடுதலைப் புலிகளுடையதாகத் தனிப்பட அடையாளப்படுத்துவதோ அல்லது விடுதலைப் புலிகளுடைய உறுப்பினர்கள், மாவீரர்களை அனுஷ்டிப்பதற்கு மாவீரர் நாள் காணப்படுகின்ற ஒரு நிலையிலே அவர்களைச் சாட்டி, இவர்கள் மே 18 இடைநிறுத்துவதற்கான ஒரு முயற்சியிலே அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எனவே அவர்கள் குற்றம் சாட்டி இருக்கக்கூடிய அந்த விடயம், எனக்குத் தொடர்புபட்டது அல்ல. எனவே இது பொதுமக்களுக்கான நினைவு ஏந்தல் தினம் என நான் அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, இந்த தடை உத்தரவை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதால் மீளளிக்கிறேன்.
அத்தோடு இந்த தடை உத்தரவு பெயர் குறிப்பிட்டுத் தந்திருக்கின்றபடியால், அதாவது
தலைவர் பிரபாகரன் பெயரும், அதே நேரம் எங்களுடைய பெயர்களும் அதிலே
குறிப்பிடப்பட்டிருப்பதனால் நாங்கள் இதைச் சட்ட ரீதியாக அணுகக்கூடிய உரிமை
எங்களுக்கு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
