கொழும்பு மக்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்க வேண்டிய குழு, அத்தியாவசியம் மற்றும் முக்கியத்துவம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு மற்றும் மக்கள் தொகை அதிகமாக உள்ள கொழும்பு பிரதேச மக்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி வழங்குனர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சந்த ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam