நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பில் செலுத்தப்பட்ட முதல் கட்டுப்பணம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் இந்த கட்டுப்பணத்தை இன்று (30.09.2024) செலுத்தியுள்ளனர்.
அத்துடன், குறித்த அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஊழலற்ற அரசியல்
இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப்பேரை களமிறக்கவுள்ளதாவும் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
ஊழல்கள், மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, மட்டக்களப்பு, நல்லையா வீதியைச் சேர்ந்த அரச திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற 81 வயதுடைய கனகசூரியம் சோமாஸ்கந்தமூர்த்தி தலைமையில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கு 8 பேருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அலிஹார் மௌலானாவின் ஊடக செயலாளர் அஸ்மி தலைமையில் சுயேட்சைக் குழுவில் 8 பேர் களமிறக்கப்பட்டு அதற்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.


மேலதிக தகவல் - ராகேஷ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam