இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது - புட்டினுக்கு நெருக்கமானவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர், இறுதி அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறி எச்சரித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்தவர் டிமிட்ரி மெத்வதேவ் (56).
ஜனாதிபதி பதவியிலிருக்கும்போது புடினை விட மென்மையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் டிமிட்ரி மெத்வதேவ், இப்போது காரசாரமான கருத்துக்களை தெரிவித்துவருகிறார்.
இதன்படி, அமெரிக்கா வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் மொஸ்கோ மேற்கத்திய நகரங்களை தாக்கும் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியை குறிவைக்கும் மெத்வதேவ்
அழிவு நெருங்கிவிட்டது என்னும் பொருளில், இறுதி அழிவின் குதிரை வீரர்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டார்கள் என்று கூறி மேற்கத்திய நாடுகளுக்கு டிமிட்ரி மெத்வதேவ் மிரட்டல் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், டிமிட்ரி மெத்வதேவ் ரஷ்ய ஜனாதிபதி பதவிக்கு அடிபோடுகிறார் என ரஷ்யாவின் முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Dmitry Gudkov தெரிவித்துள்ளார்.
புடின் பதவியிலிருந்து அகற்றப்பட்டால், அந்த இடம் தனக்கு கிடைக்கும் என அவர் எண்ணுவதால்தான் டிமிட்ரி மெத்வதேவ் இப்படியெல்லாம் செய்வதாக அவர் தெரிவிக்கிறார்.
புடின் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதால்,டிமிட்ரி மெத்வதேவை ஊடகங்கள் புடினுடைய ’ஆமாம் சாமி’ என விமர்சித்துள்ளன.