மகனின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை பலி
கேகாலை - தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார்.
காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் நேற்றிரவு (28) சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இதன்படி டபிள்யூ.சம்பத் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், அவரது 17 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, தந்தையும் மகனும் காட்டுப்பன்றியை சுற்றிவளைக்க இரு பக்கமாக சென்றுள்ள நிலையில் மகன் சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
இதன் பின்னர், தனது தவறினால் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன் உறவினர் ஒருவருடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri