காயங்கேணி கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற தந்தையும், மகனும் மாயம் (PHOTOS)
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடல் பகுதியில் தந்தையும், மகனும் காணாமல்போன சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடல் பகுதியில் வைத்தே இருவரும் காணாமல்போயிருந்தனர்.
வழமையாக இயந்திரப்படகில் சென்று மீன்பிடித்து வரும் தந்தையும்,மகனும் நேற்று கடலுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு கடலுக்குச்சென்று வீடு திருப்பாத இருவரையும் தேட ஆரம்பித்த ஏனைய மீனவர்கள், அவர்கள் இருவரும் சென்ற இயந்திரப்படகையும், மீன்பிடிக்க கடலில் வைக்கப்பட்ட வலையையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல்போய் கடலில் மூழ்கி மரணமடைந்த இருவரும் காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்டப்பகுதியை சேர்ந்த 55 மற்றும் 18 ஆகிய வயதுடைய தந்தையும், மகனும் என்று தெரியவந்துள்ளது.
கல்குடா டைவர்ஸின் உதவியுடன் காணாமல்போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில் இருவரது உடல்களையும் கல்குடா டைவர்ஸ் குழுவினர் மீட்டுள்ளனர்.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
