வேகமாக பரவும் திரிபடைந்த புதிய வகை கோவிட் வைரஸ்! விரைவில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கையில் திரிபடைந்த புதிய வகை கோவிட் வைரஸ் தொற்றானது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் குறித்த திரிபடைந்த புதிய வகை கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் வசிக்கும் பகுதிகளில் விரைவில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த பகுதிகளுக்கு வெளியே வைரஸ் பரவுவதை குறைப்பதற்காகவே இவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
புதிய வகை கோவிட் வைரஸ் வேகமாக பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய நிலைமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.