கோவிட் தொற்றுக்குள்ளான இளைஞன் தப்பியோட்டம்
கம்பஹா அத்தனகல்லை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திஹாரிய மல்வத்தை சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய கோவிட் தொற்றுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதலான பிரதேசத்தில் உள்ள விடுதியில் தற்காலிகமாக தங்கி இருந்த நிலையில், அந்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்றுள்ள இந்த ஊழியர் மாவத்தகமை கஹபத்வல மல்தெனிய பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்.
இவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்ட பின்னர், சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வரை விடுதியில் தங்கி இருக்குமாறு சுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சுகாதார துறையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த இளைஞர் தங்கி இருந்த விடுதியில் மற்றுமொரு நபருக்கும் கோவிட் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan