பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இரட்டை கொலை! பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை
பிரித்தானியாவில் பூட்டி இருந்த வீட்டிலிருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லங்காஷைர் பகுதியில் Higher Walton கிராமத்தில் உள்ள Cann Bridge தெருவிலிருந்து பொலிஸாருக்கு அவசர அழைப்பினை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டின் கதவு திறக்கப்படாமையினால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற நிலையில்,அந்த வீட்டிலிருந்த ஆண்,பெண் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், அவர்களின் மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சில மணிநேரங்களில் சந்தேகத்தின் பேரில் 35 வயதான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த வழக்கை விசாரிக்க பிரத்தியேக துப்பறியும் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், நவம்பர் 20, 2021இன் பதிவு எண் 0841ஐ மேற்கோள் காட்டி 101 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் முக்கிய கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளனர்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam