கொழும்பை நோக்கி படை எடுக்கும் யாசகர்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் தொடக்கம் வசதி படைத்தவர்கள் வரை பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போதைய இக்கட்டான நிலை யாசகர்களையும் பாதித்துள்ளது.
குறிப்பாக அண்மைக்காலமாக வெளி மாவட்டங்களில் இருந்து யாசகர்கள் கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் கடந்த இரண்டு மாதங்களில் கொழும்பு வீதிகளில் யாசகம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக குடும்பங்கள் யாசகம் எடுக்கும் கொழும்பு மாநகரில் இந்த நிலை உள்ளது.
கொழும்பு நகரில் மாத்திரம் தற்போது சுமார் 300 யாசகர்கள் உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் மட்டும் 671பேர் யாசகம் பெறுவதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதத்தில் கொழும்பில் மாத்திரம் சுமார் 10 யாசகர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த இறப்புகளில் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் (99%) உறவினர்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
