யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம்: கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்
புதிய இணைப்பு
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டதுடன், மேலதிக பரிசோதனைக்காக குறித்த மாணவியின் உடற்கூறு பகுதிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்றைய தினம்(23) உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா என்ற (25 வயது) மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சிகிச்சை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் குறித்த மாணவி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார்.
உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
