உக்ரைனை கதிகலங்க வைத்துள்ள மரண செய்தி! மொத்தமாக நொறுங்கிப்போன ஜெலென்ஸ்கி
உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் போரில் உயிரிழந்துள்ளார்.
டா வின்சி என கொண்டாடப்பட்ட 27 வயதான Dmytro Kotsiubailo என்பவரே இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முட்டில் கொல்லப்பட்டார்.
தீவிரமடைந்த போர்
பக்முட் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது.
அந்த பக்முட் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங்கியுள்ளார் இதன்போதே அவர் போர்களத்தில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, கடந்த ஆண்டில் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கி கவலை
இது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, நமது வீரர்களை இழப்பது என்பது துயரமான ஒன்று. அவர்களின் தியாகத்தை நாம் எப்பொழுதும் மறக்கமாட்டோம். எப்போதும் நன்றியுள்ளவர்களாகவும் இருப்போம் என கூறியுள்ளார்.
உயிரிழந்த உக்ரைனிய தளபதி டா வின்சியின் இறுதி கிரியையில் பெருந்திரளான உக்ரைனிய மக்கள் ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.












பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
