பக்முட் நகரில் குவிக்கப்பட்ட சடலங்கள்! 30,000 ரஷ்ய வீரர்களை துடைத்தெறிந்த உக்ரைன்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், கிழக்கு உக்ரைனில் பக்முட் நகரில் தற்போது போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய வீரர்களில் 30000 பேர் தாக்குதலில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு உக்ரைனிய பக்முட் நகரைக் கைப்பற்ற முயற்சித்த ரஷ்ய வீரர்களை உக்ரைனிய படைகள் இவ்வாறு கொன்று குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சக்கணக்கான ரஷ்ய துருப்புகள்
இது தொடர்பாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூறுகையில், பக்முட் சிறிய முக்கியமற்ற நகரம், இது முன் வரிசையில் சுமார் 745 மைல் (1,200 கி மீ) தொலைவில் உள்ளது.
அத்துடன் ரஷ்யர்கள் அதை கிராமடோர்ஸ்க் மற்றும் ஸ்லோவியன்ஸ்க் ஆகியவற்றிற்குச் செல்வதற்கான ஒரு படியாக பார்க்கிறார்கள், எனவே இந்த டான்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதியைக் கைப்பற்ற முயற்சிக்க இதை முன்னோக்கி நகர்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடும் போட்டி நிலவும் நகரமான பாக்முட்டில் லட்சக்கணக்கான ரஷ்ய துருப்புகள் களமிறக்கப்பட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.