பதவியை காப்பாற்ற நெருக்கமானவர்களை கொன்று தள்ளும் புடின்:வெளியான அதிர்ச்சி தகவல்
தனது எதிரிகளை தோற்கடிக்கவும் ஆதரவாளர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் படுகொலைகளை ஆயுதமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதுவரை 39 உயர் அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களின் மரணத்திற்கு பின்னால், புடினின் பதவி வெறி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பு
இந்த 39 பேர்கள் கொண்ட பட்டியலில் பெரும்பாலானவர்கள் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டதும், மர்மமான முறையில் குடியிருப்பில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த 39 பேரும் கடந்த ஓராண்டில் புடின் மீது விமர்சனம் முன்வைத்துள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் பல உயர் அதிகாரிகள் திடீரென்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் மரணம்
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு தமது அமெரிக்க வீட்டை விற்ற ரஷ்ய செல்வந்தர், இந்த வாரம் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
கடந்த வாரம் Sputnik V கோவிட் தடுப்பூசி உருவாக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர்கள் இருவரது இறப்பும், விளாடிமிர் புடினின் பதவி வெறிக்கு இரையானதாகவே பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FSB அமைப்பானது Murder Inc என்ற குழுவை உருவாக்கி 1930 காலகட்டத்தில் சுமார் 1,000 படுகொலைகளை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
தற்போதும் அதே பாணியை விளாடிமிர் புடின் தமது எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.