மின்வெட்டு மேலும் மேலும் அதிகரிக்கப்படும்! நேரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் மேலும் நீடிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் ஐந்து மணித்தியாலம் வரை இவ்வாறு மின்வெட்டு நீடிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் தேசிய மின்வட்டத்திற்கு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடுகட்டுவது நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர்மின்சாரத்தில் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறியாளர்கள் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
இது தொடர்பில் மகாவலி அதிகாரசபையுடன் கலந்துரையாடப்பட்ட போதும் அவர்கள் அதில் அதிக அக்கறை காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமனல வெவ மற்றும் லக்சபான நீர் மின் நிலையத்திலிருந்து இழந்த இந்த கொள்ளளவை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri