ரஷ்யாவின் கடும் எச்சரிக்கை.. உக்ரைனை உலுக்கிய பயங்கர தாக்குதல்கள்
உக்ரைன் தலைநகர் கியூவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் கியூவின் முக்கிய பாலங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இன்று காலையில் பிவ்னிச்னி பாலம் இரண்டாவது நாளாகவும் தாக்கப்பட்டதில் இருவர் காயமடைந்தனர். இதேவேளை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிவ்டென்யி பாலம் மீது பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
திடீர் விஜயம்
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜெர்மன் ஜனாதிபதி ஃப்ரெட்ரிக் மெர்ஸ் கியூவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த சமீபத்திய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கியூ மற்றும் உக்ரைனின் பிற பகுதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரேனிய படைகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் இரு பாலங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அது முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இன்று நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோ காட்சிகளை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அதில், பிவ்னிச்னி பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது, ட்ரோன் ஒன்று பாலத்தின் மீது மோதி வெடித்துச் சிதறுவதும், கறுப்புப் புகை வானில் எழும்புவதும் பதிவாகியுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பிற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில், பாலத்தின் போக்குவரத்துப் பாதையின் நடுவில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதைக் காண முடிகிறது.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri