ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவுடனான இடைக்கால உடன்படிக்கையில் முன்வைக்கப்பட்ட ஏழு நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட மாட்டாது என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹம்மத் பக்கர் கலீபாஃப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது ஈரான் முன்வைத்த முன்மொழிவின் படி, இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் ஏழு நாட்களுக்குள் கப்பல் போக்குவரத்து சீரமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கட்டார் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்கா தனது பதிலை வழங்கியுள்ளது.
இராணுவத் தாக்குதல்
எனினும், ஒருதலைப்பட்சமான கோரிக்கைகளை விதிக்கும் காலம் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான், தங்களின் தற்போதைய கவனம் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதே தவிர, அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

அத்துடன், பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காக சர்வதேச அணுசக்தி முகவர்நிலையத்தின் ஆய்வுகளுக்கு அனுமதி அளிப்பதாகக் கூறப்படும் செய்திகளையும் ஈரான் வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.
இதேவேளை, அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், அதற்குப் பதிலடி கொடுக்க ஈரான் முன்பை விடவும் தயாராக உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri