என் மகனை இப்படி பார்க்கவில்லை! நெகிழ்ச்சியில் கந்தையா பாஸ்கரன்
போராட்டம் படத்தின் ஊடாக தனது மகன் சமூக வாழ்வியலை பார்த்து அந்த பிரதேசத்திலுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டமை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஐபிசி தமிழ் நிறுவனத்தின் உரிமையாளர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
‘போராட்டம்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்றுமுன்தினம் (03) மாலை நடைபெற்றதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்தோடு, அந்த கிராம மக்களினுடைய வாழ்க்கை முறையைப் பார்த்து றீகன் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போராட்டம் திரைப்பட கதாநாயகன் றீகன் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தாலும் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் வாழ பழகி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், றீகன் படிக்கின்ற காரணத்தால் பெரிதாக வேலைகளுக்கு செல்வதில்லை எனவும் இந்த படத்தினை அடுத்து தனது சொந்த உழைப்பில் குறித்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களுக்கு உதவிகளை வழக்கியுள்ளமை தமது மனதை திருப்தி படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாயகத்தை விட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை, உணர்வுகள், போராட்டங்கள் மற்றும் சமூக யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படம் தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை இந்தக் காணொளியில் காணலாம்.